செய்திகள் :

விழுப்புரம் மாவட்டம் அறகண்டநல்லூர்: 1,300 ஆண்டுகள் பழைமையான தலம், சனி தோஷம் தீரும் அற்புதம்!

post image

நம் தேசம் முழுவதும் உள்ள சிவத்தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் முக்கியமானவை. அவற்றின் மகிமைகள் சொல்லில் அடங்காதவை. அப்படிப்பட்ட தலங்களைச் சென்று தரிசிக்கும்போதே நம் மனமும் ஆன்மாவும் மகிழ்வதை நம்மால் உணரமுடியும். அப்படி ஒரு தலம்தான் அறகண்ட நல்லூர் எனப்படும் அறையணிநல்லூர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் அமைந்திருக்கும் இந்தத் திருத்தலம் சுமார் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 12வது தலம். திருஞானசம்பந்தர் இந்தத் தலத்துக்கு வந்து அறையணிநாதரைத் தொழுது இங்கே இருந்து அண்ணாமலையாரையும் பாடித் தொழுதார். இத்தலத்தில் சம்பந்தருக்கு ஈசன் ஜோதிரூபமாகக்காட்சி கொடுத்தார் என்கிறது தலபுராணம்.

'அறை' என்றால் 'பாறை.' பாறை மீது அழகாக அமைந்து அருள்பாலிப்பவர் என்பதால் இந்த ஈசனுக்கு அறையணிநாதர் என்கிற திருப்பெயரும் வந்தது என்கிறார்கள்.

புராண காலத்தில் இங்கு ஈசனுக்கு அதுல்யநாதேஸ்வரர் என்பது திருநாமம். இதற்கு ஒப்பிலாத ஈஸ்வரர் என்பது பொருளாகும். அம்பிகைக்கு அழகிய பொன்னழகி, சவுந்தர்ய கனகாம்பிகை என்பது திருநாமம்.

இத்தலம், மகாவிஷ்ணு ஈசனை வழிபட்ட தலம் என்கிறார்கள். மகாபலியைப் பாதாள லோகத்துக்கு அனுப்பியபின் பெருமாள் இங்கே வந்து ஈசனை வழிபட்டார் என்றும் அவரைத் தேடிவந்த மகாலட்சுமித் தாயாரும் இங்கேயே கோயில் கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.

அம்பாள் பொன்னழகி தனிச்சந்நிதியில் கிழக்கு நோக்கி தரிசனம் அருள்கிறார். இவரை வழிபட்டால் சகல விதமான செல்வங்களும் சேரும் என்கிறார்கள்.

திருமண வரம் வேண்டி வரும் பக்தர்களின் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுகிறது என்றும் புத்திர பாக்கியம் வேண்டினால் இந்த அன்னை உடனே அருள்வாள் என்றும் சொல்கிறார்கள் பலன் கண்ட பக்தர்கள்.

வேண்டுதல் நிறைவேறப் பெற்ற பக்தர்கள் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் நிவேதனம் செய்து தம் நன்றியைத் தெரிவிக்கிறார்கள்.

சனி பகவான்

திருஞானசம்பந்தர் பாட திறந்த கதவு

திருஞானசம்பந்தர் இந்தத்தலத்திற்கு வந்தபோது, புற சமயத்தினரால் கோயில் அடைக்கப்பட்டிருந்தது. அப்போது சம்பந்தர் மனம் உருக ஈசனைப் பாட ஆலயத்தின் கதவுகள் திறந்தன. இதைக் கண்டு அஞ்சிய புற சமயத்தினர் விலகி ஓட சம்பந்தர் ஆலயத்துக்கு உள் வந்து மீண்டும் ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெற ஏற்பாடு செய்தார்.

சம்பந்தர் ஆலயத்துக்கு வெளியே இருந்து பதிகம் பாடியபோது அவர் சுவாமியை தரிசனம் செய்ய வசதியாக பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து கொடுத்ததாம். இன்றும் இவ்விரு நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கு விநாயகப்பெருமான் வலம்புரி விநாயகராக அருள்பாலிக்கிறார். இவர் சுயம்புமூர்த்தி என்கிறார்கள். பிராகாரத்தில் முத்துக்குமாரர் ஒரு முகமும், ஆறு கரங்களும் கொண்டு விசேஷத் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

ராமலிங்க வள்ளலார் இத்தலத்துக்கு வந்து இந்த சுவாமியைப் பாடி வணங்கியுள்ளார். இத்தலத்தில் விசேஷங்களில் ஒன்று மகாவிஷ்ணுவின் சந்நிதி. இங்கே மகாவிஷ்ணு கையில் பிரயோகச் சக்கரத்துடன் அருள்பாலிப்பது சிறப்பு.

ஸ்ரீதேவியின் கையில் உள்ள ஒரு தண்டத்தில் பறவை ஒன்று இருப்பது போலவும், அவளுக்கு இடப்புறத்தில் ஒரு பெண்ணும், வலப்புறத்தில் விலங்கு முகம் கொண்ட ஒரு ஆணும் இருக்க ஸ்ரீதேவி வித்தியாசமான கோலத்தில் அமர்ந்திருக்கிறாள்.

ரமண மகரிஷிக்கு ஜோதி ரூபமாகக் காட்சி

ரமண மகரிஷி திருவண்ணாமலை செல்லும் முன் இத்தலத்துக்கு வந்து இங்குள்ள ஈசனை வணங்கினார். அவருக்கு ஈசன் ஜோதி ரூபமாகக் காட்சி கொடுத்தார் என்கிறார்கள் பக்தர்கள்.

சனி தோஷம் தீர்க்கும்

மேலும் இத்தலம் சனி தோஷம் தீர்க்கும் தலமாகவும் திகழ்கிறது. இங்கு சனிபகவான் வலது காலை தூக்கி, காகத்தின் மீது வைத்தபடி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு அருகிலேயே மற்றொரு சனீஸ்வரர் நின்ற கோலத்தில் தனியாகவும் காட்சி அருள்கிறார். இவரை வணங்கினால் ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் சனி தசா காலத்தில் உண்டாகும் தீமைகள் அனைத்தும் விலகும் என்கிறார்கள்.

இத்தகைய அற்புதமான தலத்துக்கு வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். ஈசனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதியிலிருந்து வந்த பட்டு வஸ்திரம்; ஆண்டாளுக்கு அணிவித்து சிறப்பு பூஜை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து திருப்பதி திருமலை புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழாவிற்கு கருட சேவையின்போது மலையப்ப சாமி அணிவதற்காக ஆண்டாள் சூடி களைந்த மாலை, பட்டு வஸ்திரம... மேலும் பார்க்க

வேலூர் ஞானமலை: 'ஞானம் பிறக்கும்; நோய்கள் தீரும்' - முருகனின் பாதம் பதிந்த திருப்புகழ் தலம்!

வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலை மிகவும் பிரசித்திபெற்றது. அந்த மாவட்டத்திலேயே முருகப்பெருமானின் திருவடி பட்ட ஒரு மலை ஒன்று உண்டு என்பது பலரும் அறியாதது. சுற்றிலும் வெப்பாலை மரங்கள் உயர்ந்து நிற்க சிறிய ம... மேலும் பார்க்க

குருவின் அருளைப் பெற்று தரும் கால பைரவ பூஜை; 7 காரணங்களுக்காக இந்தப் பரிகாரம்

அதிசார குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மைகள் தர, துன்பங்கள் நீங்க 14-10-2025 தேய்பிறை அஷ்டமி நன்னாளில் அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் ஆலயத்தில் மகாகால பைரவ பூஜை நடைபெற உள்ளது.முன்பதிவு மற்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாவட்டம், சௌந்தர்யபுரம்: கடன் தீரும், திருமணம் கைகூடும், பலன் தரும் ஸ்ரீபத்மசக்கரம்!

இந்த உலகில் நமக்கு அலைமகளின் அருள் தேவை. செல்வம் என்றால் பணம் மட்டுமல்ல. திருமணம், குழந்தை பாக்கியம், தன தான்ய பெருக்கம், ஆடை ஆபரண சேர்க்கை என அனைத்துமே செல்வம்தான். அத்தனை செல்வங்களையும் நமக்கு அள்ளி... மேலும் பார்க்க

மதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு எப்போது? - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

"மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு வரும் 2026 பிப்ரவரிக்குள் குடமுழுக்கு நடத்தி விடுவோம்" என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதே நேரம், 'த... மேலும் பார்க்க

தேனி, வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்: கண் பிரச்னை தீரும், தொட்டில் கட்டினால் குழந்தை வரம்!

ஈசனும் அம்பிகையும் தேசம் முழுவதும் பல்வேறு தலங்களில் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். அப்படிப்பட்ட சுயம்புத் தலங்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பானது. நம் பாவங்களை எல்லாம் போக்கக்கூ... மேலும் பார்க்க