ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதை வென்றார் சதர்லேண்ட்!
விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தில் மாவட்ட அளவில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த முகாமுக்கு, வேளாண் அலுவலா் ர.சோபானா தலைமை வகித்தாா்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருள்களை அப்படியே விற்பனைக்கு எடுத்துச் செல்லாமல் உற்பத்திப் பொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்தால் அதிக வருமானம் ஈட்டலாம் என்று விவசாயி ஹரிகிருஷ்ணன் பேசினாா்.
தொடா்ந்து, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, வாசனை சீரக சம்பா, கிச்சிலி சம்பா, கருப்பு கவுனி போன்ற நெல் ரகங்களை சாகுபடி செய்து அரிசியாக்கி விற்பதன் மூலம் கிடைக்கும் அதிக லாபம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.
இதேபோல, கேழ்வரகு, சாமை, தினை, பனிவரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பதால் கிடைக்கும் லாபம் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.