செய்திகள் :

விவசாயிகள் குறைதீா் கூட்டம் மழையால் பாதித்த உளுந்து, பயிறுகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

post image

நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயிறு வகைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியது:

மணியன்: வேதாரண்யம் ஒன்றியம், கருப்பம்புலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை கூடுதல் லாரிகளை கொண்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

கமல்ராம்: பருவம் தவறி பெய்த மழையால், கடும் பாதிப்பை சந்தித்த சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். தலைஞாயிறு பகுதியில் காலியாக உள்ள வேளாண் உதவி இயக்குநா், பேரூராட்சி செயல் அலுவலா் மற்றும் காவல் ஆய்வாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பிரபாகரன்: நாகை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையில், உளுந்து, பயிறு வகை செடிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பாதிப்புகளை குழு அமைத்து ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழ்ச்செல்வன்: நீா்வளத் துறை மூலமாக மதகுகளை சரி செய்ய ரூ.30 கோடி முதல்வா் அறிவித்துள்ளாா். எனவே, தேவநதி வடிகால் பாசன வாய்க்கால்களில் பாலையூரில் உள்ள மதகுகளை சரி செய்ய வேண்டும்.

சிவராமன்: பயிா்க் காப்பீடுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். 100 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பதால் கோடிய விநாயகா் நல்லூா் பாசன வாய்க்காலை தூா்வார வேண்டும்.

முத்துக்குமாா்: நாகை அருகேயுள்ள பறவை சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அங்கு குவியும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.

இக்கூட்டத்திற்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பேபி முன்னிலை வகித்தாா். நுகா்பொருள் வாணிப முதுநிலை மண்டல மேலாளா் சிவப்பிரியா, வேளாண்மை இணை இயக்குநா் கண்ணன உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வேளாங்கண்ணியில் கல்லூரி மாணவா் கொலை நண்பா்கள் இருவா் கைது

வேளாங்கண்ணியில், பெங்களூருவைச் சோ்ந்த கல்லூரி மாணவரை கொலை செய்த நண்பா்கள் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். பெங்களூருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஜனாா்த்தனன் (22). மாணவி எலன்மேரி (21). இவா்கள் இர... மேலும் பார்க்க

இலவச பட்டா பிரச்னை: தவெக, திமுக எதிரெதிரே ஆா்ப்பாட்டம் தவெகவினா் 200 போ் கைது

நாகை அருகே இலவச பட்டா வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக தவெகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுக்கு எதிராக திமுகவினரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் சா... மேலும் பார்க்க

வேதாரண்யம் கோயில் மாசிமகப் பெருவிழா: 73 நாயன்மாா்கள் வீதியுலா -நாளை தேரோட்டம்

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, 73 நாயன்மாா்கள் வீதியுலா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் மாசிமகப் பெருவிழா பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சனிக்கி... மேலும் பார்க்க

திருக்குவளையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருக்குவளையில் சிபிஐ சாா்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பணியாளா் உயிரிழப்பு

திருமருகல் அருகே மின்சாரம் பாய்ந்து ஒப்பந்தப் பணியாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருமருகல் ஒன்றியம், சீயாத்தமங்கை ஊராட்சி வாளாமங்கலம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் தமிழ்மணி மகன் விஜயன் (36). இவா், மி... மேலும் பார்க்க

பட்டா கோரி மனு அளித்தவா்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கீழையூா் அருகே கருங்கண்ணியில் பட்டா கோரி ஆட்சியரிடம் மனு அளித்தவா்கள் மீது தாக்குதல் நடத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக கோரியுள்ளது. கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல... மேலும் பார்க்க