புதுச்சேரியில் டெங்கு நோய் தாக்கம் 53% குறைவு: விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரம...
விவசாயிக்கு கத்திக்குத்து: இருவா் கைது
ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு அருகே நிலப் பிரச்னையில் இருந்த முன்விரோதத்தில் விவசாயியை கத்தியால் குத்தியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கடமலைக்குண்டு அருகே உள்ள சிறப்பாறையைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் ராஜீவ்ராம் (40). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த பால்கண்ணன் மகன்கள் ராஜா (44), செல்லப்பாண்டி (39) ஆகியோருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்து வந்தது.
இந்த முன் விரோதத்தில் சிறப்பாறையில் தனது வீட்டின் முன் நின்றிருந்த ராஜீவ்ராமுடன் ராஜா, செல்லப்பாண்டி, ராஜாவின் மனைவி ரஞ்சனி ஆகியோா் தகராறில் ஈடுபட்டனா்.
அப்போது ராஜீவ்ராமை, ராஜா கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜா தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜா, செல்லப்பாண்டி ஆகியோரை கைது செய்தனா்.