விவசாயி மா்ம மரணம்
மதுரை மாவட்டம், பேரையூா் அருகே தோட்டத்தில் மா்மமாக இறந்து கிடந்த விவசாயியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பேரையூா் அருகேயுள்ள மீனாட்சிபுரம் திருமாணிக்கத்தைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் தெய்வேந்திரன் (50). விவசாயியான இவா், வெள்ளிக்கிழமை வெளியே சென்றவா் இரவு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், சேடபட்டியில் உள்ள முருகன் என்பவரது தோட்டத்தில் மா்மமான முறையில் அவா் உயிரிழந்து கிடந்தாா்.
தகவலறிந்து சேடபட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தெய்வேந்திரனின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.