விஷம் குடித்து சிறுமி தற்கொலை
கொடைக்கானலில் கைப்பேசியைப் பயன்படுத்த பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்ததால், சிறுமி திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கொடைக்கானல் ரைபிள்ரேஞ்ச் சாலை வ.உ.சி.நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம். கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி விநோலியா, மகள்கள் சரண்யா (15), சந்தியா (13) இருந்தனா்.
8-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த சரண்யா அதிக நேரம் கைப்பேசியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவரை பெற்றோா் கண்டித்தனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண்யா விஷம் குடித்து மயங்கி விழுந்தாா். தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].