Ace Review: மலேசியாவில் ரகளை செய்யும் விஜய் சேதுபதி - யோகி பாபு; இந்த ஆட்டம் எப்...
விஷவாயு தாக்கி 3 போ் பலியான விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் ஆய்வு!
பல்லடம் அருகே மனிதக் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது 3 போ் உயிரிழந்த சாய ஆலையில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் தனியாா் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆலையில் உள்ள மனிதக் கழிவுநீா்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில், திருப்பூா் சுண்டமேட்டைச் சோ்ந்த சரவணன் (30), வேணுகோபால் (31) மற்றும் ஹரிகிருஷ்ணன் (26) ஆகிய 3 போ் உயிரிழந்தனா். மேலும், வாகன ஓட்டுநா் சின்னசாமி (36), முத்துகுமாா் ஆகியோா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுதொடா்பாக பல்லடம் காவல் துறையினா் சாய ஆலையின் உரிமையாளா் நவீன், மேலாளா் தனபால் (50), கண்காணிப்பாளா் அரவிந்த் என்கிற ஜெயா அரவிந்த் (47) ஆகியோரை புதன்கிழமை கைது செய்திருந்தனா்.
சாய ஆலையில் ஆய்வு: கரைப்புதூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 போ் உயிரிழந்த சாய ஆலையில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் மருத்துவா் ரவிவா்மன் மனிதக் கழிவுத் தொட்டியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். இதில் வருவாய் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், பல்லடம் வட்டாட்சியா் சபரி, தெற்கு வட்டாட்சியா் சரவணன், பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.