Jemimah: ’ஒவ்வொரு இரவும் அழுதிருக்கிறேன்; கடவுள்தான் இதை நிகழ்த்தினார்!'- ஆனந்த ...
வீடியோ கால் டு லாட்ஜ்; திருமணம் தாண்டிய உறவு.. பாட்டி கொலை.. தப்பித்த கணவன் - காதலனுடன் கைதான பெண்!
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லோகேந்திரன். அவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜாய் மெட்டில்டா என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது.

லோகேந்திரன் பணியாற்றும் அதே அலுவலகத்தில் தான் ஜாயும் பணியாற்றி வந்தனர். அந்த நிறுவனத்துக்கு பல்வேறு கிளைகள் உள்ளன. கர்நாடகாவில் உள்ள ஒரு கிளையின் மேலாளராக பணியாற்றி வருபவர் நாகேஷ்.
நாகேஷ் – ஜாய் மெட்டில்டா இடையே திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. வீடியோ கால் மூலம் பேசி உறவை வளர்த்தவர்கள், அன்னூரில் அறை எடுத்து தங்குமளவுக்கு சென்றுள்ளது. இந்த சம்பவம் ஜாய் மெட்டில்டா கணவர் லோகேந்திரன் மற்றும் குடும்பத்தினருக்கு தெரிந்து அவர்களை கண்டித்துள்ளனர்.


சம்பந்தப்பட்ட நிறுவனமும் ஜாய் மற்றும் நாகேஷ் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் பிரச்னை ஓயவில்லை. அவர்களின் திருமணம் தாண்டிய உறவு தொடர்ந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் லோகேந்திரன் இல்லாதபோது அவர்கள் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். இதை லோகேந்திரனின் பாட்டி மயிலாத்தாள் பார்த்துள்ளார். அவரை தலையணை அமுக்கி கொன்றுவிட்டு, மாரடைப்பால் இறந்தது போல நாடகமாடியுள்ளனர். இதை அனைவரும் நம்பிவிட்டனர். அதே பாணியில் லோகேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டனர்.

ஆனால் அவர் தப்பித்துவிட்டார். இதுதொடர்பாக லோகேந்திரன் அளித்தப் புகாரின் அடிப்படையில் கோவை காவல்துறையினர் நாகேஷ் மற்றும் ஜாய் மெட்டில்டா ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.


















