செய்திகள் :

வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது மக்களின் வயிறு எரிய வேண்டுமா? - முதல்வர் ஸ்டாலின்

post image

நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது மக்களின் வயிறு எரிய வேண்டுமா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த விலை உயர்வினால், மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கான எரிவாயு உருளை விலை புது தில்லியில் ரூ.853 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? "உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்" என்பது, மனிதத்தன்மையற்ற பாஜக அரசுக்கு மிகவும் பொருந்தும்!

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!? வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அமைந்திருக்கிறது.

மக்களே… அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது! மத்திய பாஜக அரசே... தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக!” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

இனி பாமக தலைவர் நான்தான்: ராமதாஸ் அறிவிப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தானே செயல்படப் போவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.மேலும், கட்சியின் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவி... மேலும் பார்க்க

சென்னை: சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் காயமடைந்த முதியவர் பலி!

சென்னையில் காரை ஓட்டிய 14 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை காலை பலியானார்.சென்னை, குமரன் நகரில் 5-ஆவது குறுக்குத் தெருவில் கடந்த திங்கள்கிழமை 1... மேலும் பார்க்க

மேட்டூர் அணை: ஜூன் 12-ல் திறந்து வைக்கிறார் முதல்வர்!

மேட்டூர் அணையை வருகின்ற ஜூன் 12 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளதாக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம்சர்மா தெரிவித்துள்ளார்.மேட்டூர் அணையில் தமிழக நீர்வளத் துறையின... மேலும் பார்க்க

அமைச்சர் நேருவின் சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமச்சந்திரன் வீடு, அலுவலகங்களில் 3 நாள்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமச்சந்திரன் ம... மேலும் பார்க்க

மருதமலை அடிவாரத்தில் வெள்ளிவேல் திருடியவர் கைது!

கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அடிவாரத்தில் உள்ள தியான மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளிவேலை திருடியவரை காவல்துறையினர் கைது செய்யதுள்ளனர்.கோவை மாவட்டம், மருதமலை அருள்மிகு ... மேலும் பார்க்க

உதிா்ந்தது இலக்கிய ரோஜா!

அரசியல் வானில் பூத்துக் குலுங்கிய இலக்கிய ரோஜா உதிா்ந்தது. ஆம், காமராஜரின் பெருந்தொண்டன் குமரி அனந்தன் (93)) மறைந்தாா். கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் 1933, மாா்ச் 19-இல் சுதந்திரப் போராட்ட த... மேலும் பார்க்க