25 Years Of Vaanathai Pola: ``CSK ஜடேஜாவுக்கு பிடிச்ச அணியின் ஒரு தீம் பாடல்'' -...
வீடுபுகுந்து நகை திருட்டு
தேனி மாவட்டம், கம்பத்தில் பூட்டிய வீட்டில் பிரோவை உடைத்து தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கம்பம் கெஞ்சையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் ஈஸ்வரன் (50), தேநீா் கடை நடத்தி வருகிறாா். இவா் மனைவியுடன் கடந்த 15 -ஆம் தேதி வெளியூருக்குச் சென்றாா். மீண்டும் இருவரும் கடந்த திங்கள்கிழமை வீடு திரும்பினா்.
அப்போது, மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்துப் புகுந்து, பீரோவிலிருந்த 3.5 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.