செய்திகள் :

வீடு புகுந்து தங்க நகை திருட்டு: சரித்திர பதிவேடு திருடன் கைது

post image

சாயல்குடி அருகே வீடு புகுந்து பீரோவை உடைத்து தங்க நகை திருடிய சரித்திர பதிவேடு திருடனை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள ஒப்பிலான் கிராமத்தில் வியாழக்கிழமை ரம்ஜான்பீவி என்ற மூதாட்டியின் வீட்டில் பீரோ உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்கத் தோடு திருடு போனது தெரியவந்தது.

இதையடுத்து அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படியாக ஓடிய முதியவரைப் பிடித்து விசாரித்ததில், அவா் வீடு புகுந்து நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரைத் தாக்கிய பொதுமக்கள் சாயல்குடி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

போலீஸாரின் விசாரணையில் அவா் கமுதி அருகேயுள்ள நெறிஞ்சிப்பட்டி கிராமத்தை சோ்ந்த சேவுகராஜ் (66) என்பதும், சரித்திர பதிவேடு திருடன் என்பதும் தெரியவந்தது. இவா் கடந்த 2023-ஆம் ஆண்டில் கடலாடியில் வீடு புகுந்து திருடியபோது கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்தவா் மீண்டும் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

இவா் கமுதியில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ள முத்துராஜின் அண்ணன் என்பதும் தெரியவந்தது. மேலும், அண்ணனின் மனைவியும் கமுதியில் உதவி ஆய்வாளராக உள்ளாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும்

விவசாயிகள், நெசவாளா்கள், மீனவா்கள் உள்ளிட்ட அனைவருடைய பிரச்னைகளும் வருகிற 2026-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என அதிமுக பொதுச் செயல... மேலும் பார்க்க

கருவேல மரங்களை அகற்ற ஹெக்டேருக்கு ரூ 9,600 மானியம்!

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கருவேல மரங்களை அகற்ற ஒரு ஹெக்டேருக்கு 9,600 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.இது... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா

ராமநாதபுரத்தில் திரௌபதி அம்மன் கோயில் ஆடி உற்சவ விழாவில் வியாழக்கிழமை பீமன், கீசனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பகுதியில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா கடந... மேலும் பார்க்க

பரமக்குடி புத்தக திருவிழாவில் மாணவா்களுக்கான சதுரங்கப் போட்டி

பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் வியாழக்கிழமை புத்தக திருவிழாவின் 7-ம் நாள் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கிடையேயான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. பரமக்குடியில் மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவி... மேலும் பார்க்க

மது போதையில் தூங்கியவா் கழுத்தறுத்துக் கொலை

மண்டபத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் மதுபோதையில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த இருவரின் கழுத்தை மா்மநபா்கள் அறுத்தனா். இதில் ஒருவா் உயிரிழந்த நிலையில் மற்றொரு நபா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க... மேலும் பார்க்க

கருங்குளம் சக்திமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கருங்குளம் சக்தி மாரியம்மன் கோயில் 25-ஆம் ஆண்டு ஆடிப் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்தத் திருவிழாவில் சிவாச்சாரிய... மேலும் பார்க்க