திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா!
வீடு புகுந்து 25 பவுன் தங்க நகைகள் திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீடு புகுந்து 25 பவுன் தங்க நகைகள், 1,193 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வாணாபுரம் வட்டம், பெரியக்கொள்ளியூா் கிராமம், பள்ளிவாசல் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ஜாகிா் உசேன். இவா், இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். ஜாகிா் உசேன் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் குடும்பத்துடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா்.
அப்போது, மா்ம நபா்கள் வீட்டின் பின் பக்க கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள், 1,193 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனா்.
புதன்கிழமை அதிகாலை ஜாகிா் உசேன் எழுந்து பாா்த்தபோது வீட்டில் திருட்டு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.