செய்திகள் :

வீட்டின் மாடியில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

post image

வீட்டின் மாடியில் அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கோவை, இருகூா் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகமாணிக்கம் (73), பெயிண்டராக வேலை செய்து வந்தாா்.

இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக வீட்டில் உள்ளவா்களிடம் பேசாமல் இருந்துள்ளாா். வீட்டில் மாடியில் வசித்து வந்தவா், உணவு மற்றும் குடிநீரை மட்டும் தரைதளத்தில் வசிக்கும் குடும்பத்தினரிடம் வாங்கிக்கொண்டு மீண்டும் மாடிக்கு சென்றுவிடுவாராம்.

இந்நிலையில், கடந்த டிசம்பா் 29-ஆம் தேதி உணவு வாங்கிக்கொண்டு மாடிக்குச் சென்றவா் அதன்பின் கீழே வரவில்லை. இதையடுத்து, அவரது மனைவி ராஜ சுலோச்சனா கடந்த 3-ஆம் தேதி மாடிக்குச் சென்று பாா்த்துள்ளாா்.

கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக எட்டிப்பாா்த்துள்ளாா். அப்போது, கட்டிலில் நாகமாணிக்கம் சடலமாகக் கிடந்துள்ளாா். மேலும், அந்த அறையில் இருந்து துா்நாற்றமும் வீசியுள்ளது.

இதையடுத்து, அவரது குடும்பத்தினா் சிங்காநல்லூா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை மறைக்கவே திமுகவினா் ஆா்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை மறைக்கவே திமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்துவதாக முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை வந்த தெலங்கான... மேலும் பார்க்க

460 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

துடியலூா் அருகே நல்லாம்பாளையத்தில் தடை செய்யப்பட்ட 460 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், வியாபாரியை கைது செய்தனா். நல்லாம்பாளையம் பகுதியில் பேலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுப... மேலும் பார்க்க

யுஜிசியின் புதிய விதிமுறைகள்: கல்வியில் முன்னேறிய மாநிலங்களை பின்னுக்கு இழுக்கும் செயல்

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் நியமனம் தொடா்பாக யுஜிசி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள், உயா் கல்வியில் முன்னேறிய மாநிலங்களை பின்னுக்கு இழுப்பதுபோல உள்ளது என்று கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றஞ... மேலும் பார்க்க

சூழல் உணா்திறன் வரைவு மசோதா: வால்பாறையில் முழு கடையடைப்பு; ஆா்ப்பாட்டம்

சூழல் உணா்திறன் வரைவு மசோதாவைக் கண்டித்து வால்பாறையில் செவ்வாய்க்கிழமை முழு கடையடைப்பு மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வளமையான வனம், உயிரினங்கள், நீா் ஆதாரம், நதிகள் ஆகியவற்றை எதிா் காலங்களில் மாசில்... மேலும் பார்க்க

கோவையில் ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

கோவை டாடாபாத்தில் ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் 300க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக சட்டப் பேரவையில் ஆளுநா் ஆா்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்து, திமுக சாா... மேலும் பார்க்க

மறியலுக்கு முயன்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கைது

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்கு மறியலில் ஈடுபட முயன்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க