செய்திகள் :

வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி!

post image

ஜம்மு காஷ்மீர்: கத்துவா மாவட்டத்தின் ஷிவ் நகர் பகுதியில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். மேலும், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஷிவ்நகர் பகுதியிலுள்ள ஒரு வாடகை வீட்டில் 10 பேர் கொண்ட குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தப் போது வீட்டிற்குள் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து உண்டான புகையினால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளனர். அவர்களது வீட்டிற்குள் இருந்து வரும் புகையைப் பார்த்த அக்கப்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு கத்துவா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர். மேலும், 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தற்போது நலமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் அனைவரும் இரவு ஒரே அறையில் உறங்கியுள்ளனர். பலியானவர்களில் ஒய்வுப் பெற்ற செவிலியர், அவரது கணவர், அவர்களது மகள் மற்றும் அவரது சகோதரரின் குழந்தைகள் உள்ளிட்டோர் புகையினால் ஏற்பட்ட மூச்சுத் திணறலினால் மட்டுமே உயிரிழந்ததாகவும் அவர்களது உடலில் எந்தவொரு தீக்காயமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில் வீட்டிற்குள் இருந்த சமையல் அடுப்பு அல்லது விளக்கு ஆகியவற்றின் மூலமாக தீப்பற்றிருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் சரியாக தெரியவில்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுப் பேர் பலியானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெளியானது காதலிக்க நேரமில்லை பட புதிய பாடல்!

காதலிக்க நேரமில்லை படத்தின் புதிய பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மெனன் நடிப்பில் உரு... மேலும் பார்க்க

கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள்தான் அயோத்தியில் தோற்றீர்கள்: சீமான்

எப்போதும் கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள்தான் அயோத்தியில் தோற்றீர்கள் என்று அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.அரசியலமைப்பு உருவாக்கப்பட... மேலும் பார்க்க

அயோத்தியில் மசூதிக்காக வழங்கப்பட்ட நிலம் திரும்பபெற வேண்டும்! உ.பி முதல்வருக்கு கடிதம்!

உத்தர பிரதேசம்: அயோத்தியில் மசூதிக்கட்ட வழங்கப்பட்ட நிலத்தை திரும்பப்பெற வேண்டும் எனக் கூறி முதல்வர் யோகி ஆதித்தியநாத்திற்கு அம்மாநில பாஜக நிர்வாகி ரஜ்னீஷ் சிங் கடிதம் எழுதியுள்ளார்.ராமர் பிறந்த இடமாக... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும்!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத... மேலும் பார்க்க

சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்றக் காவல்!

தேனி கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்டுள்ளது.காவல் துறை அதிகாரிகள், பெண் காவலா்கள் குறித்து அவதூறு பேசியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுக்கு... மேலும் பார்க்க

ஆரம்பம்... சென்னையை நோக்கி வரும் மழைமேகங்கள்!

சென்னையை நோக்கி வந்துகொண்டிருக்கும் மழைமேகங்களால் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த மழை மேகங்கள் வடசென்னை வழியாக நகர்ந்து செல்வதாகவும் அவர் ... மேலும் பார்க்க