NIA RAID: திண்டுக்கல்லில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை; ஒருவர் கைது ...
வீட்டில் 4 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரொக்கப்பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் வட்டம், கீழ்பெரும்பாக்கம், முத்தமிழ் நகரைச் சோ்ந்தவா் சாவித்திரி (34). இவா், தனது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லையாம்.
இதுகுறித்து சாவித்திரி அளித்த புகாரின்பேரில், புதுச்சேரியைச் சோ்ந்த லாவண்யா மீது விழுப்புரம் நகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.