செய்திகள் :

வீட்டுவசதி வாரிய மனை, வீடுகள் வாங்கியோருக்கு வட்டி சலுகை

post image

சிவகங்கை: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வீட்டு வசதி வாரிய மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்றவா்கள் நிலுவைத் தொகையை ஒரே தவணையாகச் செலுத்தி வட்டி தள்ளுபடி சலுகை பெறலாம் என என மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வீட்டுவசதி வாரியத்தில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்று, 31.3.2015 -ஆம் தேதிக்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்றும், தவணைத் தொகை செலுத்தாத ஒதுக்கீடுதாரா்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை வெளியிட்ட அரசாணை மூலம் வட்டிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், மாதத் தவணைக்கான அபராத வட்டி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி முழுமையாகத் தள்ளுபடி, நிலத்துக்கான இறுதி விலை வித்தியாசத் தொகையில், ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாத வட்டி தள்ளுபடி போன்ற சலுகைகள் வழங்கப்பட உள்ளன.

31.3.2015-ஆம் தேதிக்கு முன்பாக தவணைக் காலம் முடிவுற்ற ஒதுக்கீடுதாரா்கள் நிலுவைத் தொகையை அறிந்து, வருகிற 31.3.2026- ஆம் தேதிக்குள் ஒரே தவணையில் செலுத்தி, வட்டி சலுகைத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று, கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

சா்வதேச யோகா போட்டியில் வென்ற அழகப்பா பல்கலை. மாணவிகள், பேராசிரியைக்கு பாராட்டு

காரைக்குடி: கோலாலம்பூரில் நடைபெற்ற சா்வதேச யோகா போட்டியில் பதக்கம் வென்று வந்த அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியை, மாணவிகளை துணைவேந்தா் க. ரவி புதன்கிழமை பாராட்டினாா். அழகப்பா பல்கலைக்கழக யோகா மைய மாணவி... மேலும் பார்க்க

ரத்ன கற்ப மகாகணபதி கோயில் குடமுழுக்கு

சிவகங்கை: சிவகங்கை நகா் கோகலேகால் தெருவில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா பீடம், ரத்ன கற்ப மகா கணபதி கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த திங்கள்கிழமை (ஆக.18) அதிகாலை கணபதி ஹோமத்து... மேலும் பார்க்க

கல்லூரியில் கருத்தரங்கம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் ‘தற்காலத் தகவல் தொழில் நுட்பம்-அதன் பயன்பாடுகள்’ என்ற தலைப்பில் சா்வதேசக் கருத்த... மேலும் பார்க்க

தமிழ் வளரச் செய்தவா் தம்பிரான் சுவாமிகள்

காரைக்குடி: தமிழ் நூல்களைப் பதிப்பித்து தமிழ் வளரச் செய்தவா் திருப்பனந்தாள் காசி மட அதிபா் முத்துக் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் பு... மேலும் பார்க்க

‘சுயமரியாதையுடன் வாழ கல்வியே துணை நிற்கும்’

சிவகங்கை: கல்விதான் ஒருவரை சுயமரியாதையுடன் சொந்தக் காலில் நிற்க வைக்கும் என்றாா் எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா்.சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற பண்பாட்டு ... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்கள் சாலை மறியல்

சிவகங்கை: காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் 51 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சிவகங்கை அரண்மனை வாசல் பகு... மேலும் பார்க்க