Aaladippattiyan Success Story ? | 3 கன்டெய்னர்ல அல்வா கொண்டு வர்றோம் ? | Vikatan...
வீரவநல்லூா் வடபத்திரகாளியம்மன் கோயிலில் நாளை வருஷாபிஷேகம்
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பட்டங்கட்டியாா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கன்னிமூல வெற்றி விநாயகா், கேட்டவரம் தரும் அருள்மிகு வடபத்திரகாளியம்மன், சுடலை மாடசுவாமி கோயிலில் வியாழக்கிழமை (ஜூலை 3) வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி, தாமிரவருணி ஆற்றில் இருந்து புனித தீா்த்தம் கொண்டு வரப்பட்டு அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்குகின்றன. தொடா்ந்து காலை 10 மணிக்கு மஹா அபிஷேகம், பஞ்சாமிா்த அபிஷேகம் ஆகியவை நடைபெறும். பின்னா் நண்பகல் 12 மணிக்கு விமான கலச பூஜைகள், அம்மனுக்கு புஷ்ப அலங்காரத்துடன் சிறப்பு பூஜை, மகா தீபாராதனை பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறும். மாலையில் 108 திருவிளக்கு பூஜை, பொங்கலிட்டு வழிபடுதல், இரவு 7 மணியளவில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், இரவு 8 மணிக்கு படையல் பூஜை ஆகியவை நடைபெறும்.