செய்திகள் :

வீர தீர சூரன் வசூல் எவ்வளவு?

post image

வீர தீர சூரன் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் - அருண் குமார் கூட்டணியில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் வியாழக்கிழமை மாலைக் காட்சியாகத் தாமதமாக வெளியானது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹெச்ஆர் பிக்சர்ஸ் பி4யூ (B4U) என்ற நிறுவனத்திடம் ஓடிடி உரிமத்தைக் கொடுத்துள்ளனர்.

ஆனால், ஓடிடி தேதியை உறுதிசெய்யாமல் இருந்ததால் பி4யூ நிறுவனம் வீர தீர சூரன் படத்தின் வெளியீட்டை நிறுத்த மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கு விசாரிப்பில் சில நிபந்தனைக்குப் பின் படம் வெளியானது.

இதையும் படிக்க: இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகர் மணிகண்டன்!

திட்டமிட்ட நாளில் தாமதமாத் திரைக்கு வந்தாலும் முழுநீள ஆக்‌ஷன் திரைப்படமான வீர தீர சூரன் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனால், இப்படத்திற்குக் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை இப்படம் இந்தியளவில் ரூ. 8.5 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 40 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெறும் என்றே தெரிகிறது.

ஜி.வி. பிரகாஷ் விவாகரத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை: காட்டமான திவ்ய பாரதி!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குடும்பப் பிரச்னையில் தனக்கு தொடர்பில்லை என திவ்ய பாரதி விளக்கமளித்துள்ளார்.தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக இருந்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி இணை, கடந்தா... மேலும் பார்க்க

ஃபாசில் ஜோசஃபின் மரண மாஸ் டிரைலர்!

நடிகர் ஃபாசில் ஜோசஃப் நடித்த மரண மாஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநராக அறியப்பட்ட ஃபாசில் ஜோசஃப் தற்போது மலையாள சினிமாவில் நடிகராகக் கலக்கி வருகிறார். எந்தப் படத்தில் நடித்தாலும் தன் தனித்த... மேலும் பார்க்க

தினம் தினம் திருநாளே!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.02-04-2025செவ்வாய்க்கிழமைமேஷம்: கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில்... மேலும் பார்க்க

ஹாக்கி: விடைபெற்றாா் வந்தனா கட்டாரியா

இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா (32), சா்வதேச ஹாக்கியிலிருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். எனினும், உள்நாட்டில் நடைபெறும் ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் அவா் தொடா்ந்து விளையாட... மேலும் பார்க்க

டென்னிஸ் தரவரிசை: 24-ஆம் இடத்தில் மென்சிக்

ஆடவருக்கான ஏடிபி தரவரிசையில், செக் குடியரசு வீரா் ஜேக்கப் மென்சிக் 24-ஆவது இடத்துக்கு முன்னேறினாா். மியாமி ஓபன் நிறைவடைந்த நிலையில் திருத்தப்பட்ட தரவரிசையில், அந்தப் போட்டியில் சாம்பியனான மென்சிக் 30 ... மேலும் பார்க்க