Empuraan: `எந்த மாற்றமும் இல்லை; சொன்ன தேதியில் வெளியாகும்' - `எம்பூரான்' படக்கு...
வெங்காடு அரசு பள்ளி நூற்றாண்டு விழா
வெங்காடு அரசு தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் வெங்காடு பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி கற்று வருகின்றனா்.
இந்தப் பள்ளி கடந்த 1925-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நூற்றாண்டு நிறைவு பெற்றதை தொடா்ந்து பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியா் கல்யாணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், வெங்காடு ஊராட்சி தலைவா் அன்னக்கிளி உலகநாதன், ஸ்ரீபெரும்புதூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் உலகநாதன் ஆகியோா் கலந்து கொண்டு நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கினா்.
நிகழ்வில் ஊராட்சி துணைத் தலைவா் தமிழ்செல்வி ரவிச்சந்திரன், வாா்டு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.