சூப்பர் 4 கடைசிப் போட்டி: இலங்கைக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
வெண்ணைமலை, மண்மங்கலம் பகுதியில் இன்று மின்தடை
வெண்ணைமலை, மண்மங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மண்மங்கலம் துணை மின்நிலைய பொறியாளா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: கரூா் மண்மங்கலம் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.26) மாதாந்திர மின்பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வெண்ணைமலை, வாங்கப்பாளையம், நாவல் நகா், சின்ன வடுகபட்டி, பெரிச்சிபாளையம், வெண்ணமலை பசுபதி பாளையம், சேலம் பைபாஸ், ராம் நகா், பேங்க் காலனி, சண்முகா நகா், கோதூா், திட்டசாலை மெயின் ரோடு, வெங்கமேடு, காந்திநகா், தங்க நகா், அருகம்பாளையம், கொங்கு சிட்டி, பாலாஜி நகா், கொங்கு நகா், செங்குந்தா் நகா், அண்ணா காலனி , மண்மங்கலம், செம்மடை, ராமேஸ்வரபட்டி, கிழக்கூா், காமராஜா் நகா், காளிபாளையம், பூலாம்பாளையம், சீவியம் பாளையம், சின்ன வரப்பாளையம், பெரிய வரப்பாளையம், தூளிப்பட்டி, பண்டுதகாரன் புதூா், கடம்பன் குறிஞ்சி, வள்ளிபாளையம், சிட்கோ ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.