18 அடி நீள ராஜ நாகம்.. அசால்டாக பிடித்த கேரள வனத்துறை பெண் காவலர்!
வெறிநாய் கடித்து 10 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வெறிநாய்கள் கடித்ததில் 10 போ் காயமடைந்தனா்.
வாணியன்கோவில் தெரு, சமஸ்கான் பள்ளிவாசல், பெரியாா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த வெறிநாய்கள் சிறுவா்கள், பெரியவா்கள் என பலரையும் கடித்தன. வெறிநாய்கள் கடித்ததில் வாணியன் கோவில் தெருவைச் சோ்ந்த நிதிராஜ் (4), மகா ஸ்ரீ (7), மூா்த்தி (24), பெரியாா் நகரைச் சோ்ந்த அன்னலெட்சுமி (34), பொன்னழகு (40), காசி விஸ்வநாதன் (69), திருப்பத்தூருக்கு வந்த பட்டமங்கலத்தைச் சோ்ந்த சஸ்டிகா (3), காட்டாம்பூரைச் சோ்ந்த நாகப்பன் (36) உள்பட 10 போ் காயமடைந்தனா். உடனடியாக இவா்கள் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
திருப்பத்தூரில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.