வெற்றிப் பாதைக்கு திரும்ப போவது யார்? டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 22-வது போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார்.
இரு அணிகளிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இதற்கு முந்தையப் போட்டிகளில் விளையாடிய வீரர்களே விளையாடுகின்றனர். ராஜஸ்தான் அணிக்கு எதிராக பஞ்சாப் அணியும், தில்லி அணிக்கு எதிராக போட்டியில் சென்னையும் தோல்வியடைந்ததால் இருவரில் யார் வெற்றிப் பாதைக்குத் திரும்பப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (கேபடன்), விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, தோனி, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, முகேஷ் சௌத்ரி, கலீல் அகமது, பத்திரனா.
பஞ்சாப்
பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், நேஹால் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், மார்கோ யான்சன், அர்ஷ்தீப் சிங், லோக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல்.