சர்வதேசப் போட்டியில்.. கோவை கல்லூரி மாணவா்கள் வடிவமைத்த ஹைட்ரஜன் வாகனம்!
வெல்ஸ்பன் கார்ப் நிறுவனத்தின் லாபம் இரு மடங்காக அதிகரிப்பு!
புதுதில்லி: வெல்ஸ்பன் கார்ப் நிறுவனத்தின் நிகர லாபம், டிசம்பர் காலாண்டில், இரு மடங்கு அதிகரித்து ரூ.672.19 கோடி ஆக உயர்ந்துள்ளது.
2023-24 நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டில் அதன் நிகர லாபம் ரூ.293.70 கோடியாக இருந்தது என்று நிறுவனமானது, தனது பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.4,758.17 கோடியிலிருந்து குறைந்து ரூ.3,656.57 கோடியானது. அதே வேளையில், நிறுவனமானது தனது செலவினத்தை ரூ.4,438.79 கோடியிலிருந்து ரூ.3,351.36 கோடியாக குறைத்துள்ளது.
இதையும் படிக்க: இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் சரிந்து 87.46 ரூபாயாக முடிவு!