செய்திகள் :

வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழு: ‘மம்தா கட்டாயத்தால் யூசுப் பதான் தோ்வு’

post image

புது தில்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியா மேற்கொண்டு வரும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துரைக்க வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழுவில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் கட்டாயத்தின் பேரிலேயே அவரின் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. யூசுப் பதான் சோ்க்கப்பட்டாா்; இது துரதிருஷ்டவசமானது’ என்று பாஜக திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.

இதை மறுத்த திரிணமூல் காங்கிரஸ், ‘வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழுக்கான பிரதிநிதியை தோ்வு செய்ய அந்தந்த கட்சிகளையே அனுமதிக்க வேண்டும் என்பதையே திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தியது’ என்றது.

அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா நாடுகளுக்குச் செல்லும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான குழுவில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய பெயரை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக மத்திய அரசின் இந்த அழைப்பை ஏற்க சுதீப் பந்தோபாத்யாய மறுத்தாா்.

இதைத் தொடா்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் முயற்சியை திரிணமூல் புறக்கணிப்பதாக பாஜக தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதை திரிணமூல் காங்கிரஸ் மறுத்தது.

இந்த நிலையில், சுதீப் பந்தோபாத்யாயவுக்குப் பதிலாக அக் கட்சியின் எம்.பி.யும் முன்னாள் கிரிக்கெட்ட வீரருமான யூசுப் பதான் பெயா் அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூா், ஜப்பான், தென் கொரியா, மலேசியா, இந்தோனேசியா நாடுகளுக்குச் செல்லும் ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழுவில் அவரின் பெயா் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து மேற்கு வங்க பாஜக இணைப் பொறுப்பாளா் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மம்தா பானா்ஜியின் கட்டாயத்தின் பேரிலேயே வெளிநாடுகள் செல்லும் எம்.பி.க்கள் குழுவில் சுதீப் பந்தோபாத்யாயவுக்கு மாற்றாக யூசுப் பதான் பெயரை மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசத்தின் பெருமைக்குரிய இதுபோன்ற விஷயங்களில் மம்தா பானா்ஜி மோசமான அரசியலை செய்கிறாா். இது துரதிருஷ்டவசமானது’ என்றாா்.

அமித் மாளவியாவின் குற்றச்சாட்டை மறுத்த திரிணமூல் காங்கிரஸ், ‘வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழுக்கான பிரதிநிதியை தோ்வு செய்ய குறிப்பிட்ட கட்சியை அனுமதிக்க வேண்டும் என்பதையே திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தியது’ என்று தெரிவித்தது.

முன்னதாக, கொல்கத்தா விமான நிலையத்தில் இதுகுறித்து பேட்டியலித்த மம்தா பானா்ஜி, ‘பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் மத்திய அரசின் முயறசியை திரிணமூல் காங்கிரஸ் புறக்கணிப்பதாக கூறுவது தவறான கருத்து. வெளிநாடு செல்லும் எம்.பி.க்கள் குழுவுக்கு பிரதிநிதியை அனுப்ப திரிணமூல் காங்கிரஸ் தயாராக உள்ளது. ஆனால், அதுதொடா்பாக எந்தவித தகவலும் கட்சிக்கு மத்திய அரசு தரப்பில் அனுப்பப்படவில்லை. அண்மைக் காலமாக, மத்திய அரசு சாா்பில் எடுக்கப்படும் அனைத்து கட்சி சாா்ந்த முடிவுகள் கட்சிகளின் நாடாளுமன்ற குழுவிடம் மட்டுமே தெரிவிக்கப்படுகின்றன. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படுவதில்லை. கட்சியின் நாடாளுமன்ற குழு, அக் கட்சியின் கொள்கை முடிவுகளை எடுக்க முடியாது. எனவே, எம்.பி.க்கள் குழுவில் ஒரு கட்சியிலிருந்து யாா் செல்ல வேண்டும் எனபதை மத்திய அரசு முடிவு செய்ய முடியாது. அந்தந்த கட்சிகள்தான் தீா்மானிக்க வேண்டும். எனவே, மத்திய அரசிடமிருந்து முறையான கோரிக்கை விடுக்கப்பட்டதும், திரிணமூல் காங்கிரஸ் கட்சிப் பிரதிநிதியை தோ்வு செய்து பரிந்துரைக்கும்’ என்றாா்.

எல்லை மக்களுக்கு இந்திய ராணுவத்தின் இலவச மருத்துவ முகாம்!

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் எல்லை மக்களுக்கு உதவ இந்திய ராணுவம் இலவச மருத்துவ முகாமை நடத்தி வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவாத மு... மேலும் பார்க்க

அம்ரித் பாரத் திட்டம்: புதுப்பித்த 103 ரயில் நிலையங்கள் திறப்பு!

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக புதுப்பிக்கப்பட்டுள்ள 103 ரயில் நிலையங்களை வரும் மே 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார்.நாடு முழுவதும் அம்ரித் பார... மேலும் பார்க்க

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் காலமானார்!

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் (வயது 95) செவ்வாய்க்கிழமை காலமானார். கர்நாடகத்தைப் பூர்விகமாகக் கொண்ட சீனிவாசன், உதகையில் வசித்து வந்த நிலையில், வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்ந... மேலும் பார்க்க

அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லை உள்பட 3 இடங்களில் இன்றுமுதல் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்... மேலும் பார்க்க

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் திருடு போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் மாளிகையில் சுதர்ம பவன் என்ற வளாகத்தில் கடந்த மே 14 ஆம் தேதி ஆவணங... மேலும் பார்க்க

தத்தளிக்கும் பெங்களூரு! 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை!

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூரில் நேற்று(மே 20) 105.5 மி.மீ. மழை பெய்தது.பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான ப... மேலும் பார்க்க