அம்மா, இது நள்ளிரவு 12.08..! செய்தியாளரின் அம்மாவிடம் பேசிய லக்னௌ பயிற்சியாளர்!
வெளியானது குட் பேட் அக்லி டிரைலர் !
குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. அஜித்தின் முந்தைய படமான விடாமுயற்சி படம் சரியாக போகாததால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.
படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் மற்றும் இரு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
பிரபல சின்னத்திரை நடிகர் மீது மனைவி அடுக்கடுக்கான புகார் !
இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று(ஏப்.4) வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஆனால், ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டங்களைத் தொடங்கி விட்டனர்.