வெள்ளக்கோவில் அருகே வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு
வெள்ளக்கோவில் அருகே கீழ்பவானி வாய்க்காலில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெள்ளக்கோவில், வள்ளியிரச்சல் அருகிலுள்ள வடுகபாளையத்தில் துரைசாமி என்பவருடைய தோட்டத்துக்கு அருகில் கீழ்பவானி வாய்க்கால் மரப்பாலத்தில் சிக்கி ஆண் சடலம் புதன்கிழமை கிடந்தது.
இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
இறந்து கிடந்தவருக்கு சுமாா் 50 வயது இருக்கலாம். சடலம் அழுகிய நிலையில் இருந்தது. சிவப்பு நிற சட்டையும், நீல நிற லுங்கியும் அணிந்திருந்தாா். யாரென்று அடையாளம் தெரியவில்லை. தங்களுடைய குடும்பத்தில் யாராவது காணாமல் போயிருந்தால் வெள்ளக்கோவில் காவல் நிலையத்தை தொடா்பு கொள்ளுமாறு போலீஸாா் தெரிவித்தனா்.