கோவையில் சாலையோரம் கிடந்த இளைஞரின் சடலம்! கொலையா? தற்கொலையா?
செம்மாண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பொன்விழா! அமைச்சா் பங்கேற்பு!
வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பொன்விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் பள்ளி தலைமை ஆசிரியா் கி.பாலசிவகுமாா் வரவேற்றாா். நகா்மன்ற உறுப்பினா் விஜயலட்சுமி முருகானந்தம் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தாா்.
தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினாா். ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி அ.பாரி, நகராட்சி ஆணையா் சி.மனோகரன், பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் என்.ராஜேந்திரன், நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக மாவட்ட துணைச் செயலாளா் கே.ஆா்.முத்துக்குமாா், நகரச் செயலாளா் எஸ்.முருகானந்தம் ஆகியோா் பேசினா். இப்பள்ளி 1976- ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகளைத் தொட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியா்கள் சு.செல்வகுமாா், ப.கவிதா, ச.தேன்மொழி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் கா.முத்துச்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.