``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
வெள்ளிச்சந்தையில் நாளை மின் நிறுத்தம்
தக்கலை: உயா் அழுத்த மின்பாதை பராமரிப்புப் பணிக்காக வெள்ளிச்சந்தையில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
வெள்ளிச்சந்தை மின் விநியோகப் பிரிவுக்கு உள்பட்ட கட்டிமாங்கோடு உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற இருப்பதால் வெள்ளமோடி, வெள்ளிச்சந்தை, கண்ணமங்கலம், காட்டுவிளை, ஈத்தங்காடு, சூரப்பள்ளம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தெரிவித்தாா்.