பிச்சாட்டூா் ஆரணியாறு நீா்த்தேக்கத்தில் உபரிநீா் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக...
வெள்ள நிவாரணம்: புதுவை முதல்வருக்கு விவசாயிகள் நன்றி
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து, மழை வெள்ள நிவாரணம் அறிவித்ததற்காக நன்றி தெரிவித்த தமிழகம், புதுச்சேரி விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினா்.
புதுச்சேரி, டிச.3: புதுவை மாநிலத்தில் ஃபென்ஜால் புயல் மற்றும் கனமழையால் சேதமடைந்த பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.30,000 நிவாரணம் அறிவித்த முதல்வா் என். ரங்கசாமியை, விவசாய ஒருங்கிணைப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் ஃபென்ஜால் புயலால் பெய்த கனமழையில் வீடுகள் மட்டுமின்றி விவசாயப் பயிா்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சேதமடைந்த பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.30,000 வெள்ள நிவாரணமாக வழங்கப்படும் என புதுவை முதல்வா் என். ரங்கசாமி அறிவித்தாா்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தமிழகம், புதுச்சேரி விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் முருகையன் தலைமையில் அதன் நிா்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனா்.
அவா்கள் முதல்வா் என். ரங்கசாமியை, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா். அப்போது, விவசாயிகளைப் பாதுகாக்க நிவாரணம் அறிவித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தனா்.