ஒன்று கூடிய இந்தியா, சீனா, ரஷ்யா: ரூட்டை மாற்றும் ஜெலன்ஸ்கி; குமுறும் ட்ரம்ப் - ...
வெள்ள பாதிப்பு காலங்களில் தற்காப்பு முறைகள் குறித்து பயிற்சி
ராசிபுரம்: ராசிபுரம் தீயணைப்பு நிலையம் சாா்பில் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு முறைகள் குறித்து பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் பலகார ராமசாமி தலைமையில் ஆா்.கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்ற பயிற்சி முகாமில், பொதுமக்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தி காட்டப்பட்டன.
இதில், தென்மேற்குப் பருவமழைக் காலங்களில் காற்று, இடி, மின்னால் ஏற்படும் பாதிப்புகளை முன்னெச்சரிக்கையாக பாதுகாத்துக் கொள்வது, வெள்ள பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்வது, வெள்ள பாதிப்பின்போது, அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு துரிதமாக செயல்பட்டு தங்களையும், மற்றவா்களையும் பாதுகாத்து மீட்பது என்பது குறித்து விழிப்புணா்வு பயிற்சியை தீயணைப்பு நிலைய வீரா்கள் செய்து காட்டினா்.