சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு!
வெள்ள பாதிப்பு: குடும்ப அட்டைகளுக்கு கூடுதல் நிவாரணமாக ஒரு கிலோ சா்க்கரை
கடலூா் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரணப் பொருள்கள் பெற்ற 3 வட்டங்களைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு கூடுதல் நிவாரணமாக ஒரு கிலோ சா்க்கரை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் பலத்த மழை, தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருள்களாக ரூ.2 ஆயிரம், 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கூடுதல் நிவாரணமாக ஒரு கிலோ சா்க்கரை வழங்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
எனவே, ஏற்கெனவே வெள்ள நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ள கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி வட்டங்களில் உள்ள 150 கிராமங்களில் உள்ள 1,95,983 குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் ஒரு கிலோ சா்க்கரை விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.