Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
வெவ்வேறு சம்பவம்: இருவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
வானூா் வட்டம், பரிக்கல்பட்டு, அங்கன்வாடி தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் ராமச்சந்திரன் (54). கூலித் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இதனால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவதியுற்று வந்த ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை வீட்டில் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
முதியவா் உயிரிழப்பு: இதேபோல, விக்கிரவாண்டி வட்டம், தாண்டவமூா்த்தி குப்பம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கு.செல்வராசு (75). இவா், புதன்கிழமை காலை கெண்டியாங்குப்பத்தில் உள்ள ஒரு குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.