தில்லி தேர்தல்: முதல் பட்டியலை வெளியிட்ட தேசியவாத காங்கிரஸ்!
வேங்கைவயல் சம்பவம் 2 ஆண்டுகள் நிறைவு பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாா்
வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, அசம்பாவிதங்களை தவிா்க்கும் வகையில் வியாழக்கிழமை கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் 2022-ஆம் ஆண்டு டிச. 26-ஆம் தேதி மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தெரியவந்தது.
இதுதொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வரும் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஆனால், வேங்கைவயல் கிராமத்துச் செல்லும் 7 வழிகளிலும் தடுப்புகள் அமைத்து, 32 போலீஸாா் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், 2 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், ஏற்கெனவே பணியில் இருப்பவா்களுடன் கூடுதலாக 60 போலீஸாா் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டிருந்தனா்.
உள்ளூா் ஆள்கள் தவிர, வெளியூரில் இருந்து வருவோரைத் தடுக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.