செய்திகள் :

வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார்!

post image

பிரபல ராப் பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர்.

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமானவர் ராப் பாடகர் வேடன். வேற்றுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராகத் தொடர்ந்து பாடி வருவதால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. சுயாதீன பாடகராக மட்டமல்லாமல் திரைப்படங்களிலும் பாடி வருகிறார்.

சில நாள்களுக்கு முன், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி வேடன் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் மருத்துவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கிற்காக வேடன் முன்ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தார். அந்த விசாரணை இன்று நடைபெறுகிறது.

இந்த நிலையில், வேடன் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைப் புகாரை அளித்துள்ளனர்.

அதில் ஒரு பெண் இசை விவாதம் செய்வதற்காகக் கொச்சிக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மற்றொரு பெண் வேடனின் இசையால் ஈர்க்கப்பட்ட தன்னை வேடன் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.

இது வேடன் ரசிகர்களிடையையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து பாலியல் புகார்களைச் சந்திப்பதால் மலையாள திரைத்துறையினரிடம் சலசலப்பு எற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய பட போஸ்டர்!

rap singer vedan had faces two more sexual allegations

டாக்ஸிக் படத்தில் ருக்மணி வசந்த்!

நடிகை ருக்மணி வசந்த் டாக்ஸிக் திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் யஷ் நடிப்பில் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ’டாக்ஸிக்’. கேஜிஎஃப் - 2 படத்தி... மேலும் பார்க்க

மம்மூட்டியின் களம் காவல் அப்டேட்!

நடிகர் மம்மூட்டி நடித்துள்ள களம் காவல் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.’குரூப்’ படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி களம் காவல் என்கிற திரைப்படத்தில் நடித்து ம... மேலும் பார்க்க

தமிழ் சினிமாவுக்கு நிறைய சசிகுமார்கள் தேவை: முத்தையா

நடிகர் சசிகுமார் குறித்து இயக்குநர் முத்தையா நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் கிராம வாழ்க்கையைத் திரைப்படுத்தி கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவரான முத்தையா குட்டிப்புலி மூலம் சினிமாவுக்க... மேலும் பார்க்க

ஆவணி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஆவணி மாதப் பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த... மேலும் பார்க்க

இன்றுமுதல் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு!

அமெரிக்காவில் திங்கள்கிழமை தொடங்கும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா ஆகியோா் களம் காண்கின்றனா்.இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கும் இப்போட்டியில... மேலும் பார்க்க

பயா்ன் மியுனிக் சாம்பியன்!

ஜொ்மனியில் நடைபெற்ற சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியில் பயா்ன் மியுனிக் 2-1 கோல் கணக்கில் விஎஃப்சி ஸ்டட்காா்ட் அணியை வீழ்த்தி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனது.இப்போட்டியில் அந்த அணிக்கு இது 11-ஆவது சாம... மேலும் பார்க்க