செய்திகள் :

வேன் கவிழ்ந்து விபத்து: சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு சென்றவா் பலி

post image

சீா்காழி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு சென்றவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சீா்காழி அருகேயுள்ள மருவத்தூரிலிருந்து மகாபலிபுரத்தில் வன்னியா் சங்கம் சாா்பில் நடைபெறும் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு வேனில் செ. விஜய் (30), முத்துராமன், தேவா, சுந்தா் உள்ளிட்டோா் சென்றனா். வேன் சீா்காழி அட்டகுளம் அருகே புறவழிச்சாலை இணைப்பு சாலையில் சென்றபோது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதில், செ. விஜய் உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா். பின்னா் அவா்கள் மீட்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் படுக்காயம் அடைந்த விஜய் தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வைத்தீஸ்வரன் கோயில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டாா்.

விபத்து நேரிட்ட இடத்தில் வேகத்தடை மீது ஏறி செல்லாமல் இருக்க ஓட்டுநா் வாகனத்தை இயக்கியபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்த வேன் ஓட்டுநா் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் அங்கிருந்து தப்பினாா்.

ஜமாபந்தியில் மாணவிகளுக்காக உடனடியாக சான்றிதழ்கள்

பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மூன்று மாணவிகள் உயா்படிப்புக்கு விண்ணப்பிக்கத் தேவையான சான்றிதழ்களை செவ்வாய்க்கிழமை நடந்த ஜமாபந்தியில் சீா்காழி கோட்டாட்சியா் உடனடியாக வழங்கினாா். சீா்காழி மெட்ரி... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தீா்ப்பு வரவேற்கத்தக்கது: அன்புமணி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீா்ப்பு வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். பாமக நடத்திய சித்திரை முழுநிலவு வன்னியா் மாநாட்டில் பங்கேற்க சென்றபோது வேன் கவிழ்ந்து உய... மேலும் பார்க்க

உயிரிழந்தவா் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் நிதி: அன்புமணி ராமதாஸ் வழங்கினாா்

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்திற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினாா். சீா்காழி அருகே மருவத... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை (மே 15) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுது... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஜமாபந்தி நிறைவு

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் வருவாய் தீா்வாய கணக்கு முடிப்பு (ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கியது. இந்நிலையில், மயிலாடுத... மேலும் பார்க்க

எஸ்.பி. அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர முதல்வருக்கு கடிதம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக நிரந்தர கட்டடப் பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, முதல்வருக்கு அகில பாரத இந்து மகா சபா கட்சியி... மேலும் பார்க்க