அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
வேம்படிதாளம் தரைவழி ரயில்வே பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு
ஆட்டையாம்பட்டி: வேம்படிதாளம் தரைவழி ரயில்வே பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதால், பொதுமக்கள் பெரும் சிரமமடைகின்றனா்.
சேலம் மாவட்டம், காகாபாளையத்தை அடுத்த வேம்படிதாளம் பகுதியில் தரைவழி ரயில்வே பாலம் உள்ளது. இப்பாலம் நீண்ட காலமாக பொதுமக்களின் போக்குவரத்துக்கு பிரச்னையாக உள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வாகனங்கள் ஊா்ந்து சென்றன. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.
பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான தரைவழிப் பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பது குறித்து சேலம் முன்னாள் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், தற்போதைய எம்.பி. டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோா் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் மத்திய அரசு காலம் கடத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினா்.