வேலூர்: சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; போக்சோ சட்டத்தில் 3 இளைஞர்கள் கைது; என்ன நடந்தது?
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதான ஒரு சிறுமி, தனது வீட்டின் அருகே இயற்கை உபாதைக் கழிக்கச் சென்றார். நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால், சிறுமியைத் தேடிக்கொண்டு அவரின் தந்தை அந்தப் பகுதிக்குச் சென்றார்.
அப்போது, மூன்று இளைஞர்கள் தனது மகளை வாயைப் பொத்தி அருகேயுள்ள கல்குவாரி பகுதிக்குத் தூக்கிச் சென்று அத்துமீறிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ந்துபோனார். அந்த மூன்று இளைஞர்களுமே சிறுமியின் உறவினர்கள் என்பதுதான் கூடுதல் அதிர்ச்சியாக இருந்தது. மகளைக் காப்பாற்றுவதற்காகத் தந்தை கூச்சலிட்டு அக்கம், பக்கத்தில் வசிப்பார்களை அழைத்தபோது, மூன்று இளைஞர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த விவகாரம் வெளியே தெரிந்தால், தனது குடும்பத்துக்கே அவமானம் எனக் கருதி, முதலில் புகாரளிக்காமல் உறவினரின் வீட்டுக்கு மகளை அனுப்பி வைத்திருக்கிறார் சிறுமியின் தந்தை. அங்குச் சிறுமியின் உடல்நிலைப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, இந்த விவகாரம் வேலூர் எஸ்.பி-யின் கவனத்துக்கு வந்தது.
எஸ்.பி உத்தரவின்பேரில், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 'போக்சோ' சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுமியிடம் அத்துமீறிய வீரப்பன் (28), மதன் என்கிற இளமதன் (28), சின்னராசு (30) ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://bit.ly/47zomWY