செய்திகள் :

இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதைத் தடுக்க அமெரிக்காவில் அடைக்கலம்; அன்மோல் பிஷ்னோய்யின் திட்டமென்ன?

post image

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் மாதம் துப்பாக்கியால் சுட்டது தொடர்பான வழக்கில் வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் அன்மோல் பிஷ்னோய் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். அன்மோல் பிஷ்னோய் சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமான மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையையும் அன்மோல் பிஷ்னோயும், லாரன்ஸ் பிஷ்னோயும் சேர்ந்து செய்ததாகக் கூறப்படுகிறது. இது தவிர சல்மான் கானைக் கூலிப்படை வைத்து கொலை செய்யவும் சகோதரர்கள் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இக்குற்றச்சாட்டுகளால் அன்மோல் பிஷ்னோயைக் கைது செய்ய இண்டர்போல் போலீஸார் மூலம் ரெட்கார்னர் நோட்டீஸ் விடப்பட்டது. அதனைத்தொடர்ந்து தங்களது நாட்டில் அன்மோல் பிஷ்னோய் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.

மத்திய அரசு அன்மோல் பிஷ்னோயை இந்தியாவிற்கு நாடு கடத்திக்கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுத்தது. இதனைத்தெரிந்து கொண்டு அன்மோல் பிஷ்னோய் தானாகச் சென்று அமெரிக்க போலீஸாரிடம் சரணடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அதோடு அமெரிக்காவில் தனக்கு அகதி அந்தஸ்து கொடுத்து அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று கோரி அன்மோல் பிஷ்னோய் தனது வழக்கறிஞர் மூலம் விண்ணப்பித்திருக்கிறார். இதனால் அவரை உடனடியாக நாடு கடத்த வாய்ப்பு இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அன்மோல் மீது கனடாவிலும் வழக்குகள் இருக்கின்றன. கனடாவும் அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி இருக்கிறது. அடைக்கலம் கோரி விண்ணப்பித்து இருந்தால் அந்த மனு மீது முடிவு எடுக்கப்படும். முன்பு அந்த நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அன்மோல் பிஷ்னோய் கூட்டாளி கொல்டி பிரர் என்பவரும் இதே போன்று அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துவிட்டு அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதே முறையை அன்மோல் பிஷ்னோயும் பின்பற்றி இருக்கிறார். இதனால் இந்தியா அல்லது கனடாவிற்கு நாடு கடத்தப்படுவதை அன்மோல் பிஷ்னோய் தடுத்து நிறுத்தி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஓசூர்: நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு; குமாஸ்தா கைது; பின்னணி என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (நவம்பர் 20) பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் அருவாளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஓசூர் ஏரித்தெருவைச் சேர்ந்தவர் நாராயண... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: கணவன், குழந்தையைக் கொன்று புதைத்த வழக்கு; மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை; பின்னணி என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் ராஜா. பெற்றோரை இழந்த ராஜா, அதே பகுதியில் வசித்து வந்த தீபிகா என்ற இளம்பெண்ணைக் காதலித்து, கடந்த 2017ஆம் ஆண்டு ... மேலும் பார்க்க

வேலூர்: சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; போக்சோ சட்டத்தில் 3 இளைஞர்கள் கைது; என்ன நடந்தது?

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதான ஒரு சிறுமி, தனது வீட்டின் அருகே இயற்கை உபாதைக் கழிக்கச் சென்றார். நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால், சிறுமியைத் தேடிக்கொண்டு அவரின் தந்தை அந்தப் பகுதிக்குச் செ... மேலும் பார்க்க

`பணக்காரர்கள் மட்டும்தான் டார்கெட்; ஏழைகளை துன்புறுத்தமாட்டேன்!' - திருடி சிக்கிய இளைஞர் பேச்சு

மும்பை போரிவலி பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் சுக்ராம் என்பவர் தனது குடும்பத்தோடு வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று இருந்தார். அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டு கதவை திறந்து உள்ளே இருந்த லாக்கரை உடைத... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: அரசுப்பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் - ஒரு தலைக்காதலால் வெறிச்செயலா?

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். கடந்த நான்க... மேலும் பார்க்க

நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி, 3 வயது மகள் கடத்தல்; 8 பேர் கைது - பின்னணி என்ன?

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அல்தாப் தாசிப் (36). இவர் அதே பகுதியில் 'ஏ.பி.ஆர்' என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது.திருவண்ணாமலை, வேலூர்... மேலும் பார்க்க