ராணிப்பேட்டை: கணவன், குழந்தையைக் கொன்று புதைத்த வழக்கு; மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை; பின்னணி என்ன?
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் ராஜா. பெற்றோரை இழந்த ராஜா, அதே பகுதியில் வசித்து வந்த தீபிகா என்ற இளம்பெண்ணைக் காதலித்து, கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் பிரனீஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில், கணவரின் நண்பர் ஒருவருக்கும், தீபிகாவுக்கும் இடையே தகாத தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு இடையூறாக இருந்த கணவனையும், குழந்தையையும் கொலை செய்யத் திட்டம் தீட்டியிருக்கிறார் தீபிகா. அதன்படி, கடந்த 13-5-2019 அன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணவன் ராஜாவின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றிருக்கிறார் மனைவி தீபிகா. அதன் பிறகு, தனது குழந்தையையும் இரக்கமில்லாமல் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்.
இதையடுத்து, இரு உடல்களையும் ஏரிக்கரை அருகே குழிதோண்டிப் புதைத்திருக்கிறார் தீபிகா. இதற்கு அவருடன் தொடர்பிலிருந்த கணவரின் நண்பரும் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக, ஆற்காடு தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (நவம்பர் 20) தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கணவன், குழந்தையைக் கொலை செய்த குற்றத்துக்காக தீபிகாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கூடுதலாக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மூன்றாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன. அதேசமயம், இவ்வழக்கிலிருந்து கணவரின் நண்பர் விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தீர்ப்புக்குப் பிறகு தீபிகா சிறையில் அடைக்கப்பட்டார்.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினது பென்னி குயிக்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்குப் பின்னாடி இருக்க காரணங்கள் உங்களுக்கு தெரியுமா? பிரிட்டிஷார் ஏன் அந்த அணையைக் கட்டுனாங்க... எப்படி அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தாங்க... ஏன் 999 வருஷத்துக்கு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தாங்க... இப்படிப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கான பதில்களையும் வரலாற்றையும் சுவாரஸ்யமாக சொல்லும் நாவல்தான் ஆனந்த விகடனில் வெளியான நீரதிகாரம்.
இப்போது அது விகடன் Play-ல் ஆடியோ புத்தகமாக!
இப்பவே விகடன் App-ஐ இன்ஸ்டால் பண்ணுங்க. நீரதிகாரம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடியோ புத்தகங்களை இலவசமா கேட்டு என்ஜாய் பண்ணுங்க!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY