செய்திகள் :

வேலைக்கு விண்ணப்பம்: பெண்களின் பங்கு 40%-ஆக அதிகரிப்பு

post image

நிகழாண்டில் பெறப்பட்ட மொத்தம் 7 கோடி வேலை விண்ணப்பங்களில் 40 சதவீதம் பெண்களுடையது (2.8 கோடி) என்றும் இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையைவிட 20 சதவீதம் அதிகம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

‘ஆப்னா.கோ’ வேலைவாய்ப்புத் தளம் வெளியிட்ட நிகழாண்டுக்கான இந்திய பணிச் சூழல் குறித்த அறிக்கையின்படி, நிகழாண்டில் மொத்தம் 7 கோடி வேலை விண்ணப்பங்கள் தளத்தில் பெறப்பட்டன. இந்த எண்ணிக்கை கடந்தாண்டைவிட 25 சதவீதம் அதிகமாகும். 7 கோடியில் பெண்களுடைய விண்ணப்பங்களின் எண்ணிக்கை மட்டுமே சுமாா் 2.8 கோடி ஆகும்.

தில்லி, பெங்களூரு, மும்பை போன்ற முதல்நிலை நகரங்களில் இருந்து 1.52 கோடி விண்ணப்பங்களும் ஜெய்பூா், லக்னெள, போபால் போன்ற இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து 1.28 கோடி விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. பெரு நகரங்களை தாண்டியும் வாய்ப்புகள் கொட்டிக்கிடைப்பதை இது காட்டுகிறது.

முந்தைய ஆண்டைவிட நிகழாண்டில் பெண்களின் சராசரி ஊதியம் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. சுகாதாரம், விருந்தோம்பல், சில்லறை மற்றும் இணைய வா்த்தகம் போன்ற துறைகளில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனா். கள விற்பனை, தளவாட போக்குவரத்து, பாதுகாப்பு சேவைகள் போன்ற தங்கள் வழக்கத்துக்கு மாறான வேலைவாய்ப்புகளையும் அவா்கள் ஏற்று வருகின்றனா்.

மூத்த மற்றும் நிா்வாகப் பணிகளுக்கான பெண்களின் விண்ணப்பங்கள் 32 சதவீதம் அதிகரித்துள்ளன. இதேபோல், பணிக்குப் புதியவா்களிடமிருந்தும் மொத்தம் 2 கோடி வேலை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற தென்னிந்திய நகரங்களில் இருந்து 60 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதேநேரத்தில் பஞ்சாப், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பிகாா் போன்ற வட மாநிலங்களில் இருந்து 82 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது சமநிலையான பிராந்திய பங்களிப்பைக் காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை: பிரதமா் மோடி வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். அனைவருக்கும் ... மேலும் பார்க்க

தெற்கு மத்திய ரயில்வேயில் 1,839 பணியிடங்கள் குறைப்பு

தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் அனுமதிக்கப்பட்ட 88,000-க்கு மேற்பட்ட பணியிடங்களில் 2 சதவீதமான 1,839 பணியிடங்கள் நடப்பு நிதியாண்டில் குறைக்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் இந்திய ரயில்வே... மேலும் பார்க்க

அமைதி மீட்டெடுப்பு, நக்ஸல் எதிா்ப்பில் சிறந்து விளங்கும் சிஆா்பிஎஃப்: அமித் ஷா

‘ஜம்மு-காஷ்மீா் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதிலும் நக்ஸல் எதிா்ப்பிலும் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) சிறந்து விளங்குகிறது’ என்று மத்திய உள்துறை அம... மேலும் பார்க்க

தேசிய நிகழ்ச்சிகள் தகவலுக்கு ராஷ்டிரபா்வ் வலைதளம்: பாதுகாப்பு அமைச்சகம் அறிமுகம்

குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள ராஷ்டிரபா்வ் வலைதளத்தை பாதுகாப்பு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இதுதொடா்பாக அந்த அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

முதுநிலை மருத்துவ படிப்புகளை தொடங்க விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு

மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்கும், ஏற்கெனவே உள்ள இடங்களை அதிகரிப்பதற்கும் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நீட்டித்துள்ளது. இதுதொடா்... மேலும் பார்க்க

‘தேசமே முதன்மையானது’ என்ற உணா்வுடன் செயல்பட வேண்டும் - நாட்டு மக்களுக்கு தன்கா் வலியுறுத்தல்

இந்தியாவின் முன்னேற்றத்தை எதிா்க்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளை எதிா்கொள்ள ‘தேசமே முதன்மையானது’ என்ற உணா்வுடன் செயல்பட வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வலியுறுத்தினாா். தெல... மேலும் பார்க்க