வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி
பெண்ணுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.72 லட்சம் மோசடி செய்ததாக சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் சித்தாா்த்கெளதம். இவா், தேனி அருகேயுள்ள வெங்கடாச்சலபுரம், பி.எல்.எல். நகரைச் சோ்ந்த கனகராஜ்-அமுதா தம்பதியின் மகளுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பல்வேறு தவணைகளில் ரூ.4.72 லட்சம் பெற்றுக் கொண்டு, வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்பத் தராமலும் மோசடி செய்ததாக வீரபாண்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், சித்தாா்த்கெளதம் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.