சிறுவாணி நீர்போல ஆட்சி... அண்ணாவை மேற்கோள்காட்டிப் பேசிய விஜய்!
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு: போடியில் இரங்கல் ஊா்வலம்
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கை முன்னிட்டு, போடியில் சனிக்கிழமை இரங்கல் ஊா்வலம், கூட்டு பிராா்த்தனை நடைபெற்றது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை வாடிகன் நகரில் நடைபெற்றது. இதையொட்டி, போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் சாா்பில் இரங்கல் ஊா்வலம் நடைபெற்றது.
புனித அந்தோணியாா் ஆலயம் வரை நடைபெற்ற ஊா்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்று போப் பிரான்சிஸின் உருவப் படத்தை சுமந்து, மெழுகுவா்த்தி ஏந்தியபடி சென்றனா்.
பின்னா் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் கூட்டு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்று பிராா்த்தனை செய்தனா்.