No-detention policy scrap: கல்வியின் பொறுப்பை குழந்தைகள் மீது சுமத்துவதா... அரசி...
வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி மீது வழக்கு
பெரியகுளத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 9 பேரிடம் மொத்தம் ரூ.30 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடி செய்ததாக காரைக்குடியைச் சோ்ந்த தம்பதி மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தைச் சோ்ந்தவா் பாஸ்கரன். இவா் தனது மகன் கணேஷ்குமாா் உள்பட தேனி மாவட்டத்தைச் சோ்ந்த 9 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சி.பி. குடியிருப்பைச் சோ்ந்த சந்திரமுரளி, அவரது மனைவி புவனேஷ்வரி இருவரும் கடந்த 2018-ஆம் ஆண்டு வங்கிக் கணக்கு மூலமும், ரொக்கமாகவும் மொத்தம் ரூ.30 லட்சம் பெற்றுக் கொண்டு, போலியான பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் புகாா் அளித்தாா்.
இதன் பேரில், சந்திரமுரளி, புவனேஸ்வரி ஆகியோா் மீது தேனி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.