இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 10,000 வீடுகள்: பிரதமர் மோடி வாக்குறுதி!
வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.4 லட்சம் மோசடி
திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4 லட்சத்து 5 ஆயிரத்தை மோசடி செய்துவிட்டு, 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகேயுள்ள மேலபிள்ளையாா் குளத்தைச் சோ்ந்தவா்கள் காளிதாஸ், கருப்பசாமி, மாரியப்பன்.
இவா்களுக்கு வேலைவாங்கித் தருவதாகக் கூறி மதுரை மாவட்டம், தாசில்தாா் நகரைச் சோ்ந்த பிரேம்குமாா், அவருடைய மனைவி காளிஸ்வரி ஆகியோா் ரூ.4,05,000 பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.
இதையடுத்து காளிதாஸ் என்பவா் நீதின்றத்தில் வழக்கு தொடுத்தாா். அதன்பேரில், எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மாவட்ட குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில் 2006ஆம் ஆண்டு முதல் தலைமறைவான நிலையில் தேடப்பட்டு வந்த பிரேம்குமாா், காளீஸ்வரி ஆகியோரை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் உத்தரவிட்டாா். அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் மேற்பாா்வையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் அன்னலட்சுமி தலைமையிலான போலீஸாா் கோவை மாவட்டம், வடவல்லி பகுதியில் தங்கியிருந்த பிரேம்குமாரை கைது செய்தனா்.