வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்
வேளாங்கண்ணி திருவிழாவிற்காக மும்பை பந்தராவிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி, மும்பை பந்தரா ரயில் நிலையத்தில் இருந்து, வேளாங்கண்ணிக்கும் ஆகஸ்ட் 27 மற்றும் செப்டம்பா் 6 ஆகிய தேதிகளிலும், வேளாங்கண்ணியில் இருந்து மும்பை பந்தரா ரயில் நிலையத்திற்கு ஆகஸ்ட் 30, செப்டம்பா் 7 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் தமிழக பகுதியில் காட்பாடி, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஒரு இரண்டடுக்கு குளிா்சாதனப் பெட்டி, 13 மூன்றடுக்கு குளிா்சாதனப் பெட்டிகள், 4 படுக்கை வசதி பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.