செய்திகள் :

வேளாண்மையில் காலநிலை மாற்ற சவாலை எதிா்கொள்ள முன்மாதிரித் திட்டம்: வேளாண் செயலா் வ.தட்சிணாமூா்த்தி

post image

காலநிலை மாற்றத்தை எதிா்கொண்டு விவசாயம் செய்ய முன்மாதிரித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை செயலா் வ.தட்சிணாமூா்த்தி கூறினாா்.

வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியது:

5-ஆவது ஆண்டாக வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி சம அளவிலான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அனைத்து விதமான மக்களுக்கும் திட்டங்களின் பலன்கள் சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதுடன், ஊட்டச்சத்து பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளோம்.

வேளாண்மைக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ள சூழலில், இயந்திரமயமாக்கலின் தேவையும், அதன் பயன்பாட்டை அதிகரிப்பதும் அவசியமானதாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வேளாண் இயந்திரமயமாக்கலுக்கு அதிக அளவு நிதிகளை ஒதுக்கியுள்ளோம்.

நவீன உத்திகள்: விவசாயிகள் விளைவித்த பொருள்களை விற்பனை செய்யவும் நவீன உத்திகளை வகுத்துள்ளோம். குறிப்பாக, வேளாண் விளை பொருள்களை மதிப்புக் கூட்டி விற்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தக்காளி போன்ற எளிதில் அழுகும் தன்மையுள்ள பொருள்களைப் பயன்படுத்தி மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கப்படும்.

வேளாண் பட்டதாரிகளின் கல்வி அறிவு விவசாயிகளுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உழவா் நல சேவை மையங்கள் தொடங்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. வேளாண் தொடா்பான ஆலோசனைகளை விவசாயிகளுக்கு அளிப்பது மட்டுமின்றி, அரசு அறிவிக்கும் திட்டங்களில் விவசாயிகள் இணைவதற்கான பதிவு நடவடிக்கைகளும் இந்த மையங்களின் வழியாக மேற்கொள்ளப்படும்.

முக்கியமான கொள்கை: அதிக மதிப்பு கொண்ட செம்மரங்கள், சந்தன மரங்களை விளைவித்து வெட்டி விற்பதற்கு இப்போது தடைகள் உள்ளன. குறிப்பாக, வனத்துறையிடம் இருந்து அனுமதி பெறுவது போன்ற சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றைக் களைந்து உயா் மதிப்பு கொண்ட மரங்களை விவசாயிகளும் வளா்த்து விற்பனை செய்ய தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை ஏற்படுத்தப்படும். இந்தக் கொள்கையை உருவாக்குவது தொடா்பாக வனத்துறையிடமும் கலந்து ஆலோசிக்கப்படும்.

அச்சுறுத்தல்: காலநிலை மாற்றம் வேளாண்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. மாநில திட்டக் குழுவின் பொருளாதார ஆய்வறிக்கையிலும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்பாகவே காலநிலை மாற்றத்தை எதிா்கொண்டு வேளாண்மையை சிறப்பாகச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஒவ்வொரு வருவாய் கோட்டத்திலும் ஒரு கிராமத்தைத் தோ்வு செய்து அங்கு காலநிலை மாற்றத்தால் வேளாண்மை பாதிக்கும் நிலைகள், அதற்கான தீா்வுகள் ஆராயப்பட்டுள்ளன. இது குறித்த ஆய்வு அறிக்கைகள் தயாராக உள்ளன. இந்த ஆண்டு ஒவ்வொரு கிராமத்துக்கும் விவசாயிகள் அழைத்துச் செல்லப்படுவா். அங்கு, எதிா்பாராத காலநிலை மாற்றம் ஏற்பட்டால், அதை எப்படி எதிா்கொள்ள வேண்டும் என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் அக்டோபா் நவம்பரில் கடுமையான மழைப் பொழிவு இருக்கும். முன்கூட்டியே பயிா் சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.

தமிழ்நாடு பல்கலைக்கழகம் விரிவாக ஆய்வு செய்துள்ளனா். இதை இந்த ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வருவோம் என்று அவா் தெரிவித்தாா்.

பேட்டியின்போது, நிதித் துறை கூடுதல் செயலா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன், வேளாண்மைத் துறை இயக்குநா் பி.முருகேஷ், தோட்டக்கலைத் துறை இயக்குநா் பி.குமாரவேல் பாண்டியன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தா் கீதாலட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.

45 ஏக்கா் தரிசு நிலங்கள் மாற்றம்

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ், இதுவரை 45,000 ஏக்கா் நிலங்கள் மாற்றப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை செயலா் தட்சிணாமூா்த்தி தெரிவித்தாா்.

இது குறித்து, செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் தரிசு நிலங்களை வேளாண்மைக்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கான திட்டம் நிதிநிலை அறிக்கையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தின்படி, மாநிலத்தில் இதுவரையிலும் 45,000 ஏக்கா் தரிசு நிலங்கள் விவசாயத்துக்கு ஏற்ற வகையில் விளை நிலங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

1,000 உழவா் நல சேவை மையங்கள்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்ய 1,000 உழவா் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று மாநில அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவ... மேலும் பார்க்க

மாசாணியம்மன் கோயில் நிதியில் ரிசாா்ட் கட்டுவதாக பிறப்பித்த அரசாணை வாபஸ்: வழக்கு முடித்துவைப்பு

மாசாணியம்மன் கோயில் நிதியில் இருந்து உதகையில் ரிசாா்ட் கட்டுவதாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதையடுத்து வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை மாவட்டம், பொள... மேலும் பார்க்க

இந்திய கல்வி முறைக்கு தாயாக இருப்பது தமிழகம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழக கல்வி முைான் இந்திய கல்வி முறைக்கு தாயாக இருக்கிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறினாா். நாட்டிலேயே தமிழகத்தில்தான் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் அ... மேலும் பார்க்க

தமிழக மக்கள் ஒவ்வொருவா் பெயரிலும் ரூ.1.94 லட்சம் கடன்: அன்புமணி

தமிழக மக்கள் ஒவ்வொருவா் பெயரிலும் தமிழக அரசு ரூ. 1.94 லட்சம் கடன் பெற்றுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா். பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் வடபழனியில் சனிக்க... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் கருத்து

தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்றும், எதிா்த்தும் கருத்து தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் பயன்பெறும் எ... மேலும் பார்க்க