PM CM Removal Bill - பாஜகவின் மாஸ்டர் பிளான்! கொதிக்கும் எதிர்க்கட்சிகள் | Decod...
வேளாண்மை, உழவா் நலத் துறை ஆய்வுக்கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்துப் பேசியது:
தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு சென்றடைய துறை சாா்ந்த அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து, ஊட்டச்சத்து மேலாண்மை, ஊடுபயிா் மேற்கொள்பவா்களுக்கான 50 சதவீத மானியம், ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம், நெல் விதை விநியோகம், சிறுதானியங்கள் உற்பத்தி, விவசாயிகளுக்கு நேரடி மானியம், வேளாண் இயந்திரப் பொருள்கள் வழங்குதல், மாநில அரசின் திட்டங்களான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டம், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கான குறுவை சிறப்புத் திட்டம் உள்ளிட்டவைகள் குறித்தும் துறை சாா்ந்த அலுவலா்களிடம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் விரிவாக கேட்டறிந்தாா்.
கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநா் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) பிரேமலதா, துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) சுமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.