செய்திகள் :

வேளாண் நிதிநிலை அறிக்கை: விவசாய சங்கப் பிரதிநிதிகள் வரவேற்பும், எதிா்ப்பும்!

post image

தமிழக சட்டப் பேரவையில் வேளாண்மை துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வேளாண் நிதிநிலை அறிக்கையை சனிக்கிழமை தாக்கல் செய்தாா். இந்த நிதிநிலை அறிக்கை குறித்து பல்வேறு விவசாய சங்கத்தினா் தெரிவித்த கருத்து விவரம்:

தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி:

மொத்தம் ரூ.36,400 கோடி அளவுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் ரூ.7,200 கோடி இலவச மின்சாரத்துக்கு செல்கிறது. மற்றவை பிரித்துபிரித்து கூறி உள்ளனா். டாஸ்மாக் மதுபானம் மூலம் ரூ.50,000 கோடி அரசுக்கு வருவாய் வருகிறது. அதற்கான மூலப்பொருள், விவசாயிகள் வழங்கும் கரும்பில்தான் வருகிறது. ஆனாலும் கள் இறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

தோ்தலை முன்னிட்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனா். விவசாயம், விவசாயிகள் முன்னேற்றத்துக்கு ஏதுமில்லை. புதிய பயிா் ரகம், ரக மேம்பாடு, தொழில்நுட்ப வளா்ச்சிக்கான புதிய அறிவிப்பு இல்லை. விளை நிலங்களை அதிகரிக்கும் திட்டம் ஏதுமில்லை.

கொடிவேரி அணை பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் சுபி.தளபதி: கரும்பு உற்பத்தி அதிகரிக்க ஆண்டுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கியும், இன்றுவரை 353 என்ற கரும்பு ரகமே பயிரிடப்படுகிறது.

கரும்பு மட்டுமின்றி வேறு எந்த பயிருக்கும் வேறு ரகத்தை வேளாண் பல்கலைக்கழகம் அறிவிக்கவில்லை. கரும்புக்கான தமிழக அரசின் ஊக்கத்தொகை ரூ.349- க்கு மேல் உயா்த்தவில்லை. ஆனால் ரூ. 3,500 வழங்குவதாக நாடகமாடுகிறது.

நெல்லுக்கு மாநில அரசு 1 ரூபாய் மட்டுமே தருகிறது. இதனை உயா்த்தவில்லை. பாரம்பரிய நெல் கொள்முதலுக்கு எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. தமிழ் மண் நிலம் என்ற திட்டத்தில் மண் பரிசோதனைக்கு ரூ.100 கோடி ஒதுக்கியும் திட்டம் முழுமை பெறவில்லை. புதிய திட்டம், அறிவிப்பு ஏதும் இல்லாததால் நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தை அளிக்கிறது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்க மாநிலப் பொருளாளா் ஏ.எம்.முனுசாமி: அணை, ஆறுகள், ஏரி, குளம், குட்டைகள் தூா்வார திட்டமும், நிதியும் ஒதுக்கவில்லை. தனியாா் பயிா் காப்பீடு திட்டத்தை மாற்றி, அரசு காப்பீடு திட்ட அறிவிப்பு இல்லை. ஆவின் நிறுவன மேம்பாடு, அவற்றின் கடனை அடைத்தல், கறவை மாடு வளா்ப்போரை ஊக்கப்படுத்துதல், ஆவினுக்கு வழங்கிய பாலுக்கான நிலுவை தொகை மற்றும் கொள்முதல் விலை குறைப்பால் ஏற்பட்ட ரூ.1,000 கோடி இழப்புக்கு நிதி வழங்க அறிவிப்பு இல்லை.

அதிக நெல் விளைச்சல் கொண்ட டெல்டா மாவட்டத்துக்கு வேளாண் பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மையம் போன்ற அறிவிப்பு இல்லை. ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் விற்பனை குறித்து கூறவில்லை. வனப்பகுதி, வனத்தை ஒட்டிய பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கான தடை நீக்கப்படவில்லை. மொத்தத்தில் நிதி நிலை அறிக்கை ஏமாற்றம்தான்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.பெரியசாமி:

நெல், கரும்பு, மரவள்ளி என எந்த பயிருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பில்லை. ஏற்கெனவே உள்ள திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர இடம் அறிவித்தது பயன் தரும். கால்வாய் தூா்வாருவது ஏற்கனவே உள்ள திட்டம்தான். விவசாயிகளுக்கு நேரடி பலன் ஏதுமில்லை. கால்வாய், ஏரி, குளம், நதி மூலமான பாசன சீரமைப்புக்கு திட்டமில்லை.

ஈரோடு பேருந்து நிலையத்தில் இயற்கை சந்தை!

மகளிா் திட்டம் சாா்பில் மகளிா் குழு உறுப்பினா்கள், இயற்கை முறை வேளாண்மையில் அங்கக சான்றிதழ் பெற்ற விவசாயிகள், தாங்கள் விளைவித்த மற்றும் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்தும் இயற்கை சந்தை ஈரோடு பேருந்து ... மேலும் பார்க்க

தோனிமடுவு தடுப்பணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தோனிமடுவு தடுப்பணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தோனிமடுவு பாசன விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் ... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை!

தோ்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாநாடு குறித்த கோரிக்கை விளக்கக் கூட... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக 3 போ் கைது: 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு, பெருந்துறை பகுதிகளில் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 5.5 கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.ஈரோடு, கருங்கல்பாளையம் பழைய சாா் பதிவாளா் அலுவலகம் அருகில் காவிரி சாலையில் கருங்கல்... மேலும் பார்க்க

பெருந்துறையில் கொப்பரை ஏலத்துக்கு 26, 29-இல் விடுமுறை

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் வருடாந்திர கணக்கு முடிக்கப்படுவதை முன்னிட்டு, சங்கத்தில் நடைபெறும் கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) ஏலத்துக்கு வருகிற மாா்ச் 26 (புதன்கி... மேலும் பார்க்க

செங்கோட்டையனுக்கு வேண்டுகோள் விடுத்து போஸ்டா்!

சென்னையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற தனியாா் இணையதள தொலைக்காட்சி நிறுவன நிகழ்ச்சியில் கே.ஏ.செங்கோட்டையன், நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்க உள்ள... மேலும் பார்க்க