செய்திகள் :

வேள்பாரி: `முதல்வர் இருந்த மேடையில் `ஓல்ட் ஸ்டூடண்ட்’னு பேசினேன்; இப்போ வரும்போதே.!’ - கலகலத்த ரஜினி

post image

விகடன் பிரசுரத்தில், எம்.பி சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களில் வெளியாகி மக்களின் மனதைக் கவர்ந்த புத்தகம் ‘வீரயுக நாயகன் வேள்பாரி'.

இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. இதனைக் கொண்டாடும் விதமாக இப்புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா இன்று (ஜூலை 11) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ‘வேள்பாரி 1,00,000’ வெற்றிச் சின்னத்தைத் திறந்துவைத்து நடிகர் ரஜினிகாந்த் சிறப்புரையாற்றினார்.

அப்போது, ``நிறையச் சொல்ல வேண்டும் என அறிவு சொல்லும். எப்படிப் பேசவேண்டும் என திறமை சொல்லும். எவ்வளவு பேச வேண்டும் என அரங்கம் சொல்லும். எதைப் பேச வேண்டும் பேசக்கூடாது என அனுபவம் சொல்லும். இதே அரங்கத்தில் எ.வ.வேலு கலைஞர் குறித்து எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடந்தது.

வேள்பாரி 1 லட்சம் பிரதிகள் வெற்றி விழா - ரஜினிகாந்த்
வேள்பாரி 1 லட்சம் பிரதிகள் வெற்றி விழா - ரஜினிகாந்த்

ஓல்ட் ஸ்டூடண்டை சமாளிக்கிறது கஷ்டம்னு பேசினேன்!

அதில், மதிப்புக்குரிய முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். நான் யதார்த்தமாகப் பேசும்போது 'ஓல்ட் ஸ்டூடண்டை சமாளிக்கிறது கஷ்டம்னு பேசினேன். ஆனா மனசுக்குள்ள, 'ஓல்ட் ஸ்டூடண்ட்டோட அனுபவம்தான் ஒரு இயக்கத்தின் தூண். அந்த மாதிரி ஓல்ட் ஸ்டூடண்ட் இல்லைனா எந்த இயக்கமும் தேறாது. அவர்கள் தூண்கள் மட்டுமில்ல, சிகரம் கூட'னு பேசனும்னு நினைச்சுட்டு இருந்தேன்.

ஆனா அரங்கத்துல இருக்குற எல்லாரும் 'ஓல்ட் ஸ்டூடண்ட்'னு சொன்னதும் சிரிச்சாங்கல்ல, அதுல நான் பேசனும்னு நினைச்சத மறந்துட்டேன். அதனால, இப்போ வரும்போதே மிஸ்டர் ரஜினிகாந்த் நல்லா பார்த்துப் பேசு. நீ பேசுற மேடை ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மேடை பார்த்துக்கோ... எல்லாரும் உன் ரசிகர்கள் இல்லனு' யோசிட்டே பேசுறேன்." என்றார்.

வேள்பாரி Audio Formatல் கேட்க :

https://play.vikatan.com/Velpari-audio-book

வேள்பாரி புத்தகம் வாங்க இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்

https://tinyurl.com/Velpari-Books

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

வேள்பாரி: `75 வயசுல... ஸ்லோ மோஷனில் நடந்துவர்ற இந்த ரஜினியை ஏன் கூப்பிட்டிருக்காங்கனு..!’ - ரஜினி

விகடன் பிரசுரத்தில், எம்.பி சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களில் வெளியாகி மக்களின் மனதைக் கவர்ந்த புத்தகம் ‘வீரயுக நாயகன் வேள்பாரி'.இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனைய... மேலும் பார்க்க

வேள்பாரி: `விகடனில் அதிகம் கிழித்தது என்னைத்தான்; இருந்தாலும் நட்பில் எந்த விரிசலும் இல்லை’ - ரஜினி

விகடன் பிரசுரத்தில், எம்.பி சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களில் வெளியாகி மக்களின் மனதைக் கவர்ந்த புத்தகம் ‘வீரயுக நாயகன் வேள்பாரி'.இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனைய... மேலும் பார்க்க