வைணவப் பக்தி மகா உற்சவம் நிறைவு
டிஜி வைணவக் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்ற வைணவப் பக்தி மகா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.
சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள டிஜி வைணவக் கல்லூரியின் வைர விழாவை முன்னிட்டு ‘வைணவப் பக்தி மகா உற்சவம்’ ஜன. 18, 19 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. இதில், திருவாளா் கோஸ்சுவாமி 108 வைஷ்ணவ் ஆசாா்யா ஸ்ரீ துருமில்குமாா்ஜி மகோத்யாஸ்ரீ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவா்களுக்கு அருளாசி வழங்கினாா்.
விழாவில், கோ பூஜையும், புருஷோத்தம யாகமும் பக்தி தொடா்பான கண்காட்சி, வல்லப் கலை அகாதெமி சாா்பில் கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. மேலும், வைர விழாவின் அஞ்சல் தலை, உறை, பரிசுப்பொருள் ஆகியன வெளியிடப்பட்டன.
இதில் டிஜி வைணவக் கல்லூரியின் முதல்வா் சேது.சந்தோஷ்பாபு, கல்லூரிச் செயலா் அசோக்குமாா் முந்த்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.